எமது அரசாங்கம் தீர்வினை தராது, சர்வதேசமே தலையிட வேண்டும் -
இன்றைய போராட்டம் குறித்து காணாமல் போன உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியாவில் கடந்த 617ஆவது நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல்போன உறவுகள் கடந்த பல நாட்களாக வெயிலிலிருந்து போராடி வந்தோம் இன்று கொட்டும் மழைக்கு மத்தியிலும் எமது போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம்.
அத்துடன் இன்று எமது காணாமல்போன உறவுகளை அவசரமாக அழைத்து முடிவு ஒன்றினை மேற்கொண்டுள்ளோம்.
இன்றைய போராட்டத்தில் எமக்குத்தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் வெளிநாடுகளின் தலையீடு அவசியம் ஏற்பட்டிருக்காது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வந்து எமக்கு உதவி செய்து நேரடியாக வந்து இப்பிரச்சினையை தீர்த்து வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று கொட்டும் மழையிலும் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.
இன்று எமது போராட்டத்ததை வெளிநாடுகள் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கின்றனர். நாங்கள் வெளிநாட்டின் தலையீட்டினையே நம்பி இங்கிருந்து போராடி வருகின்றோம் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமல்போன உறவுகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கடந்த 617ஆவது நாட்களாக வீதியிலிருந்து போராடி வரும் காணாமல் போன உறவுகள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் தமது கோரிக்கையினை முன்வைத்து 50ற்கும் மேற்பட்ட தாய்மார்கள் இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
எமது அரசாங்கம் தீர்வினை தராது, சர்வதேசமே தலையிட வேண்டும் -
Reviewed by Author
on
November 02, 2018
Rating:

No comments:
Post a Comment