சுரங்கத்தில் சிக்கி 10 நாட்களாக தவிக்கும் 15 தொழிலாளர்கள்: மீட்புப் பணியில் சிரமம் -
ஜைண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்துக்குள் வேலைக்காகக் கடந்த 13 ஆம் திகதி 15 தொழிலாளர்கள் சென்றுள்ளனர்.
சுரங்கத்துக்கு அருகே ஓடும் லைடெயின் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றில் உள்ள தண்ணீர் சுரங்கத்துக்குள் புகுந்துள்ளது.
370 அடி ஆழமுள்ள சுரங்கத்தில் 70 அடி வரையிலும் தண்ணீர் இருப்பதாக உள்ளே சென்ற தொழிலாளர்கள் வெளியில் வரமுடியாமல் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து 9 நாள்களாக நடைபெற்று வருகின்றன.

தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 100 வீரர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டு சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் உள்ளே சிக்கி இன்றோடு ஒன்பது நாள்கள் ஆன நிலையில் அவர்களின் நிலை பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
அந்தச் சுரங்கங்கமானது எலிப் பொறி போல இருப்பதால் அதனுள் சிக்கியவர்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சுரங்கத்தில் சிக்கி 10 நாட்களாக தவிக்கும் 15 தொழிலாளர்கள்: மீட்புப் பணியில் சிரமம் -
Reviewed by Author
on
December 23, 2018
Rating:

No comments:
Post a Comment