இலங்கை அணியை காப்பாற்றிய மேத்யூஸ்- குசல் மெண்டிஸ்: தரவரிசைப் பட்டியலில்
ஐசிசி சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் தரவரிசைக்கான வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசைப்பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அஞ்சலோ மேத்யூஸ் எட்டு இடங்கள் முன்னேறி 16-ஆம் இடத்தினைப் பிடித்துள்ளார்.
மற்றொரு இலங்கை வீரரான குசல் மெண்டிஸ் இரண்டு இடங்கள் முன்னேறி 18-ஆம் இடத்தினைப் பிடித்து மேத்யூசின் நிலைக்கு சற்றுப் பின்னர் காணப்படுகின்றார்.

குசல் மெண்டிஸ்-மேத்யூஸ் ஜோடி கடந்த புதன் கிழமை நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் சாதனை இணைப்பாட்டத்தை கொடுத்ததன் மூலம் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து இலங்கை அணி தப்பித்து, ஆட்டத்தை டிரா செய்தது.
குறித்த போட்டியில் அஞ்செலோ மெதிவ்ஸ் அரைச்சதம் (83), சதம் (120) என இரண்டு இன்னிங்ஸ்களிலும் அசத்தியதோடு, குசல் மெண்டிஸ் இரண்டாவது இன்னிங்சில் சதம் (141) ஒன்றினை விளாசியிருந்தார்.
இப்படியாக இரண்டு வீரர்களும் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை கொடுத்ததன் காரணமாகவே ஐ.சி.சி. இன் புதிய தரவரிசையில் முன்னேற்றம் பெற காரணமாக அமைந்தது.
இலங்கை அணியை காப்பாற்றிய மேத்யூஸ்- குசல் மெண்டிஸ்: தரவரிசைப் பட்டியலில்
Reviewed by Author
on
December 23, 2018
Rating:
No comments:
Post a Comment