இலங்கையை பாதுகாத்த சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு! அமைச்சர் பெருமிதம் -
கடந்த காலத்தைப் போல் அன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு நாட்டின் அரசமைப்பை பாதுகாத்துள்ளார்கள் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள அமைச்சர், இடைக்கால வரவு செலவுத்த திட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர்,
வரவு – செலவுத் திட்டத்தைப் பொறுத்தவரை, மக்கள் எதிர்ப்பாராத சலுகைகளை வழங்க நாம் தீர்மானித்துள்ளோம். இன்றும் நாட்டில் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் தான் இருக்கிறார். மகிந்த தரப்பினர் வேறு கட்சிக்கு சென்றுள்ளமையால், அவர்களுக்கான சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை தானாகவே இரத்து செய்யப்படும்.
இது தொடர்பில் நீதிமன்றைக்கூட நாட வேண்டிய தேவைக் கிடையாது. எனவே, சபாநாயகர் தான் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றார்.
அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டினால் ரணில் தரப்பினர் பதவியை மீண்டும் பெற்றனர். இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற எம்மைப் போன்ற ஒரு கட்சியுடன் தெற்கு கட்சியொன்றுடன் இணைந்து செயற்படுவதை முக்கியமான ஒன்றாகக் கருத வேண்டும்.
அவர்கள், கடந்த காலங்களில் இவ்வாறான ஒரு கொள்கையில் இருக்கவில்லை. தற்போது, அவ்வாறு இல்லை. நாடாளுமன்றில் அவர்கள் முழுமையாக நாட்டின் அரசமைப்பை பாதுகாத்தார்கள்.
நாட்டின் ஐக்கியத்துக்கும் இது முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. இவ்வாறான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டை நாம் முழுமையாக வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணியிலிருந்து அரசாங்கத்தில் இணைய இன்னுமொரு தரப்பினர் வருகைத் தரவுள்ளனர். தற்போது எமது அரசாங்கத்துடன் இணைந்துக் கொண்டவர்களும் அமைச்சுப் பதவிகளை எதிர்ப்பார்த்து இணைந்துக்கொள்ளவில்லை.
எம்முடன் இணைந்து அரசியல் பயணத்தை தொடர்வதற்காகவே அவர்கள் வந்தார்கள். இவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை.
எவ்வாறாயினும், தற்போது நாட்டு மக்களுக்கு அரசியலமைப்பு தொடர்பில் சிறந்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களினால், ஒருமுறையேனும் அரசியலமைப்பை மக்கள் வாசித்திருப்பார்கள்.
இவ்வாறான நிலையில், அமைச்சுக்களுக்கான பெயர் பட்டியலைத் தயாரிப்பது பிரதமருக்கு உரிய கடப்பாடு என்றும் அதனை இறுதி செய்யும் கடமை ஜனாதிபதிக்கு உரியது என்றும் மக்கள் அறிந்திருப்பார்கள்.
இவர்கள், இருவரும் ஒன்றிணைந்துதான் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பதவிகளை வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வார்கள்.
அத்தோடு, இன்று சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரிக்குக்கூட இவற்றில் தலையிடும் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டவாக்கம், நீதி மற்றும் நிறைவேற்றுத் துறைக்கு சமமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், எமது அரசாங்கம் உறுதியான பயணத்தை எதிர்க்காலத்திலும் மேற்கொள்ளும் என்பதை நான் கூறிக்கொள்கிறேன் என்றார்.
இலங்கையை பாதுகாத்த சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு! அமைச்சர் பெருமிதம் -
Reviewed by Author
on
December 24, 2018
Rating:

No comments:
Post a Comment