மன்னாரில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கு கத்தோலிக்க மக்கள் கலந்துகொள்ள அழைப்பு-
கிறிஸ்து பிறப்பு பெருவிழாவையொட்டிய இலங்கை அரசின் கிறிஸ்தவ மத அலுவல்கள்திணைக்களத்தினூடாக மேற்கொள்ளப்படும் விழா இம்முறை மன்னாரில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மன்னாரில் இடம்பெற்று வருகின்றன.
இவ் விழாவானது எதிர்வரும் 16ந் திகதி (16.12.2018) பிற்பகல் 2 மணிக்கு
மன்னார் நகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெறுவதற்கான ஆய்த்தங்கள் இடம்பெறுகின்றன.
வருடாவருடம் இலங்கை அரசின் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பங்குகளுக்கு பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருவதாகவும், இவ்வாண்டும் இவ் மறைமாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 15 பங்குகள் உதவிகள் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே இவற்றை கவனத்தில் கொண்டு மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த பங்குகளிலுள்ள மக்கள் மறைமாவட்டத்தின் கத்தோலிக்க மக்களின் ஈடுபாட்டை வெளிக்கொணருமுகமாக இவ் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் மன்னார் மறைமாவட்டத்தின் மறைக்கல்வி, கல்வி, விவிலிய அருட்பணிகள் இயக்குனர் அருட்பணி கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார் சகல பங்கு மக்களையும் வேண்டியுள்ளார்.
இவ் விழாவுக்கு வருகை தருவோருக்கான போக்குவரத்துக்கள் ஒழுங்கு
செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Reviewed by Author
on
December 13, 2018
Rating:
Reviewed by Author
on
December 13, 2018
Rating:

No comments:
Post a Comment