பல்கலைக்கழகத்தில் கவுரவப் பட்டம் பெற்ற நாய்! எதற்காக தெரியுமா? -
வடக்கு கரோலினா நகரைச் சேர்ந்தவர் பிரிட்னி ஹாலே. முதுகுத்தண்டுவடப் பிரச்சனை இருப்பதால் இவரால் நடக்க முடியாது. எனினும், இவர் கிளார்க்ஸன் பல்கலைக்கழகத்தில் ஆக்குபேஷனல் தெரபி பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக கிரிஃபின் என பெயர் வைத்து கோல்டன் ரெட்ரீவர் இன நாய் ஒன்றை பிரிட்னி வளர்த்து வருகிறார். இந்த நாய்க்கு பல்வேறு கட்டளைகளை பிரிட்னி சொல்லிக் கொடுத்தார்.
அதனை கேட்டு நடக்கும் அந்த நாய் பிரிட்னியின் சக்கர நாற்காலியை தள்ளிச் செல்லுதல், வீட்டு வாயில் கதவை திறந்துவிடுதல், பிரிட்னியின் செல்போனை எடுத்து வருதல் போன்ற வேலைகளையும் செய்து வருகிறது.

மேலும், பிரிட்னி பல்கலைக்கழகத்திற்கு வரும்போது அவரை பாதுகாப்பாக அழைத்து வருதல், அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளையும் செய்து வருகிறது. இந்நிலையில் பிரிட்னிக்கு பல வழிகளில் உதவி செய்து வருவதால், கிரிஃபின் நாய்க்கு கவுரவப் பட்டம் அளிக்க நியூயார்க்கில் உள்ள பாட்ஸ்டாம் அறக்கட்டளை சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி கிரிஃபினுக்கு கவுரவப் பட்டம் வழங்கப்பட்டது. இதுகுறித்து நாயின் உரிமையாளர் பிரிட்னி ஹாலே கூறுகையில்,
‘நான் மட்டும் பட்டம் பெற்றால் போதாது, நான் வளர்க்கும் கிரிஃபினையும் பட்டம் பெறும் அளவுக்கு உயர்த்துவேன் என்று தீர்மானித்து வளர்த்தேன். எஜமானருக்கு மிகச்சிறந்த பணி, கட்டுப்பட்டு நடத்தல், அர்ப்பணிப்பு உணர்வுடன் இருத்தல், என்னுடைய படிப்பின் வெற்றி ஆகியவற்றுக்கு உதவியது என அனைத்தையும் கணக்கிட்டு பட்டம் வழங்கப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வெஸ்ட் விர்ஜின் சிறைச்சாலையில் நாய் வாங்க நான் சென்றிருந்தபோது, கிரிஃபினைப் பார்த்து வாங்கினேன். பல நாய்கள் என்னிடம் வருவதற்கு, என் சக்கர நாற்காலியைப் பார்த்தும் அச்சமடைந்தன.
ஆனால், கிரிஃபின் என்னிடம் வந்து பாசத்துடன் பழகி, என்னை முத்தமிட்டது. அப்போது இருந்து கிரிஃபின் என்னுடன் தான் இருக்கிறது. என்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு கிரிஃபினை தேடிச் சென்று பார்க்கின்றனர். விளையாடி மகிழ்ந்து செல்கின்றனர்.
வேறு எங்காவது நான் வேலைக்குச் சென்றால் கூட எனக்கும், கிரிஃபினுக்கு சேர்த்து ஒட்டும்மொத்தமாக வேலை வழங்கும் நிறுவனத்துக்கே வேலைக்குச் செல்ல போகிறேன். கிரிஃபின் இல்லாமல் என்னால் எந்தப் பணியையும் செய்ய இயலாது’ என தெரிவித்துள்ளார்.


பல்கலைக்கழகத்தில் கவுரவப் பட்டம் பெற்ற நாய்! எதற்காக தெரியுமா? -
Reviewed by Author
on
December 19, 2018
Rating:
No comments:
Post a Comment