இந்தோனேஷியாவை தாக்கிய சுனாமி! பலர் உயிரிழப்பு -
இந்தோனேஷியாவில் Sunda Strait கடல் பகுதியில் நேற்று இரவு தாக்கிய சுனாமி காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தம் காரணமாக 165 பேர் காயமடைந்ததுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அந்த பகுதியில் முதலில் நில அதிர்வு ஒன்று உணரப்பட்ட நிலையில் சுனாமி தாக்கியதாக அந்நாட்டு அனர்த்த முகாத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் வளிமண்டலவியல் மற்றும் காலநிலை ஆய்வு மையத்தின் தகவலுக்கமைய, சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கு நிலஅதிர்வு காரணமல்ல என கூறிப்பிடப்படுகின்றது. இதற்கு Anak Krakatoa எரிமலை நடவடிக்கைகளின் விளைவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த சுனாமி தாக்கத்தின் போது கடல் பகுதியில் நின்ற ஒருவர் அதனை காணொளியாக பதிவிட்டு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதன் போது கடல் அலை வேகமாக வருவதனை அவதானிக்க முடிந்துள்ளது.
இந்த காணொளி சுனாமி தாக்கத்தை நன்கு வெளிப்படுத்துவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமான முன்னெடுக்கப்படுவதோடு, காயமடைந்தவர்களை வைத்தியசாலை அனுமதிக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
நேற்று இரவு 9.30 மணியளவில் சுனாமி தாக்கியுள்ளதாகவும், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டது. இந்த அனர்த்தம் காரணமாக பெருமளவு மக்கள் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை வட மாகாணத்தில் நேற்று பெய்த அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள குளங்கள் உடைப்பு எடுத்துள்ளன.
இந்நிலையில் இந்தோனேஷியாவில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளமை காரணமாக தாயக மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக தெரிய வருகிறது.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட இந்தோனேஷியாவின் சுமத்திரா பகுதியில் ஏற்பட்ட பாரிய சுனாமி அனர்த்தம் காரணமாக இலங்கை உட்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இலங்கையில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேஷியாவை தாக்கிய சுனாமி! பலர் உயிரிழப்பு -
Reviewed by Author
on
December 23, 2018
Rating:

No comments:
Post a Comment