ஆசனவாயில் அரிப்பா? இதோ உங்களுக்கான மருத்துவம் -
இதற்கான இயற்கை மருத்துவம் இதோ,
ஆசன வாயில் எரிச்சல் அல்லது குடைச்சல் அதிகமாக இருந்தால், கற்றாழை ஜெல்லை அப்பகுதியில் தடவுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
புடலங்காய் தோல் விதையுடன் (150 கிராம்), வெண்டைக்காய்(15) இரண்டையும் நீராவியில் வேகவைத்து பொறியல் செய்து தேங்காய் துருவலுடன் சேர்த்து சாப்பிடவும், காலை மாலை என இரு வேளையும் எடுத்துக் கொள்ளவும்.
சீமைச்சாமந்தியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் அந்நீரைக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியைத் துடைத்து எடுக்க வேண்டும்
பீர்க்கங்காய்(200 கிராம்), புடலங்காய்(100 கிராம்), புதினா(சிறிதளவு) இவை மூன்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து நன்கு வடிகட்டி நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.
சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து தினமும் ஐந்து கிராம் அளவு எடுத்து தண்ணீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும்.
வெற்றிலை(2), மிளகு(2), உலர் திராட்சை(5) இவை மூன்றையும் சேர்த்து இரவு படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று முழுங்கவும்.
3 பூண்டு பற்களை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் அந்நீரால் ஆசன வாய் பகுதியைக் கழுவுங்கள்.
ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, ஆசன வாய் பகுதியில் தடவினால், எரிச்சல் மற்றும் குடைச்சலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
ஆசனவாயில் அரிப்பா? இதோ உங்களுக்கான மருத்துவம் -
Reviewed by Author
on
December 23, 2018
Rating:

No comments:
Post a Comment