ரணில் தலைமையிலான புதிய அமைச்சரவையின் விபரம் இதோ?
இலங்கையின் சமகால அரசியலில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் தொடர் மாற்றங்களே இதற்குக் காரணம்.
இந்நிலையில், புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில், அவர் தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது.
இதன்படி புதிய அமைச்சரவை மற்றும் அமைச்சுக்கள் தொடர்பான பல விபரங்கள் தற்போது கசிந்துள்ளன.
ஒவ்வொரு அமைச்சுக்களுக்குமான அமைச்சர்களின் பெயர் விபரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் மூலம் தெரியவருகின்றது.
அதன்படி,
1. ரணில் விக்ரமசிங்க - பிரதமர், தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
2. காமினி ஜயவிக்ரம பெரேரா - வனவிலங்கு, சுற்றுலா, வயம்ப அபிவிருத்தி மற்றும் புத்த சாசன அமைச்சு
3. மலிக் சமரவிக்ரம - சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு
4. திலக் மரபான - வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
5. ரவி கருணாநாயக்க - நிதி அமைச்சு
6. மங்கள சமரவீர - பெற்றோலிய வள அபிவிருத்தி, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சு
7. அகில விராஜ் காரியவசம் - கல்வி, உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு
8. லக்ஷ்மன் கிரியெல்ல - பொது நிறுவனங்கள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சு
9. வஜிர அபேவர்தன - பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு
10. ராஜித சேனாரத்ன - உடல்நலம், சுதேச மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து அமைச்சு
11. ரவூப் ஹக்கீம் - துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு
12. சம்பிக்க ரணவக்க - நகர அபிவிருத்தி மற்றும் நலன்புரி அமைச்சு
13. ரிஷாட் பதியுதீன் - வர்த்தக மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு
14. டி.எம். சுவாமிநாதன் - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சு
15. அர்ஜுன ரணதுங்க - விளையாட்டு அமைச்சு
16. ஜோன் அமரதுங்க - வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் கிறிஸ்தவ விவகாரங்கள் அமைச்சு
17. துமிந்த திஸாநாயக்க - வேளாண்மை மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு
18. கபீர் ஹாசிம் - நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை மேம்பாடு அமைச்சு
19. விஜித் விஜயமுனி சொய்சா - மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி, கிராமப்புற பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு
20. ஏ.எச்.எம். பௌசி - போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு
21.பியசேன கமகே - மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு
22. கயந்த கருணாதிலக - வெகுஜன ஊடக, நாடாளுமன்ற விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு
23. சரத் பொன்சேகா - தொழிலாளர் மற்றும் தொழிற்கல்வி விவகாரங்கள் அமைச்சு
24. தலதா அத்துகோரல - நீதி மற்றும் சிறைச்சாலை மறுவாழ்வு அமைச்சு
25. ரஞ்சித் மத்தும பண்டார - உள் விவகார, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு
26. பழனி திம்பம்பரம் - தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு அமைச்சு
27. சஜித் பிரேமதாச - வீடமைப்பு, சமூக அதிகாரமளித்தல் மற்றும் நலன்புரி அமைச்சு
28. நவீன் திசாநாயக்க - இளைஞர் விவகாரங்கள், திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி அமைச்சு
29. ஹரின் பெர்னாண்டோ - தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, ஊவா அபிவிருத்தி அமைச்சு
30. மனோ கணேசன் - தேசிய ஒருங்கிணைப்பு, அரச கரும மொழிகள் மற்றும் நல்லிணக்கம் அமைச்சு
போன்ற அமைச்சுக்கள் வழங்கப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் தலைமையிலான புதிய அமைச்சரவையின் விபரம் இதோ?
Reviewed by Author
on
December 16, 2018
Rating:

No comments:
Post a Comment