தமிழின அழிப்பிற்காக ராஜபக்சவிற்கு உதவியது யார்? இந்திய அரசியல் பிரபலம் -
தமிழக ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் செய்தியாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துள்ளன என தெரிவித்துள்ளார். மேலும், யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதலாவது பிரதமர், நமது நரேந்திர மோடியே, இன்று 400 அம்புயுலன்ஸ் வண்டிகள் அங்கு சேவைக்கு கொடுக்கப்பட்டுள்ளன. வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன, கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தற்போது ஈழத்தில் படுகொலைகள் இடம்பெறவில்லை, மீனவர்கள் நிம்மதியாக இருக்கின்றார்கள். இறுதி போரில் இலட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்ததுக்கு, இறுதிப்போருக்கு காரணம் காங்கிரஸ் என்று ராஜபக்ச தெரிவிக்கின்றார்.
அந்த காங்கிரஸ்தான் இன்று ஆட்சிக்கு வரவேண்டும் என்று வைகோ துடிக்கின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பொழுது அவர்களின் துடிப்பு தமிழர்களின் உயிரில் இல்லை, தங்களது மேம்பாட்டிலேயே இருக்கின்றது என தமிழிசை குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழின அழிப்பிற்காக ராஜபக்சவிற்கு உதவியது யார்? இந்திய அரசியல் பிரபலம் -
Reviewed by Author
on
December 16, 2018
Rating:

No comments:
Post a Comment