பிரித்தானியாவை தாக்கவிருக்கும் அடுத்த புயல்: வானிலை ஆராய்ச்சி மையம் -
வெள்ளிக்கிழமை மணிக்கு 80 மைல் வேகத்தில் காற்றுகளும் பெருவெள்ளமும் பிரித்தானியாவை தாக்கவிருப்பதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை, ரயில், விமானம் மற்றும் படகுப் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ள வானிலை ஆராய்ச்சிமையம், அதனால் தாமதங்கள் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
வடக்கு வேல்ஸ், வடக்கு இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து முழுவதும் உள்பகுதிகளில், மணிக்கு 60 முதல் 70 மைல் வேகத்தில் காற்று வீசலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஸ்காட்லாந்தின் வெளிப்பகுதிகளில் மணிக்கு 80 மைல் வேகத்தில் காற்று வீசும்.
வடக்கு மற்றும் மேற்கு ஸ்காட்லாந்தில் பலத்த மழையையும் எதிர்பார்க்கலாம்.
இந்த எச்சரிக்கைகள், வெள்ளிக்கிழமை காலை 3 மணி முதல் நள்ளிரவு வரை நீடிக்கும். மணிக்கு 80 மைல் வேகத்தில் காற்று வீசும் பகுதிகளில், காற்றில் பறக்கும் பொருட்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
புயல் நீங்கும் நிலையில், வார இறுதியில் வடக்கிலிருந்து குளிர்ந்த காற்று வீசும்.
அடுத்த வாரத்திலும் கிழக்கிலிருந்து குளிர்ந்த காற்று வீசலாம் என்பதால், அதிக பனிப்பொழிவுக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை முன்னறிவிப்பாளரான Sara தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவை தாக்கவிருக்கும் அடுத்த புயல்: வானிலை ஆராய்ச்சி மையம் -
Reviewed by Author
on
December 07, 2018
Rating:
No comments:
Post a Comment