மாதுளைபழத்தின் மகிமை
இந்த மாதுளை பழம் சுவையில் இனிப்பாகவும் அவையே நமது உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கிய மருந்தாகவும் உள்ளது.
மாதுளம் பழத்தின் ஒவ்வொரும் பகுதியும் எண்ணற்ற நன்மைகளை நமக்குத் தருகின்றன. தற்போது மாதுளையினை சாப்பிடுவதனால் என்ன என்ன பயன் என்பதை பார்ப்போம்.

- குழந்தைக்கு செரிமான பிரச்சனை இருப்பின் மாதுளை சாப்பிட்டாலே போதும் விரைவில் செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும்.
- குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் அதிகமாக இருந்தால் மாதுளை ஜூஸை அடிக்கடி கொடுப்பதன் மூலம், குடல் புழுக்களை அழித்து வெளியேற்றலாம்.
- மாதுளை ஜூஸ் காய்ச்சலைக் குணப்படுத்த உதவும். மேலும் இதில் உள்ள அத்தியாவசிய சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை.
- மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்றவை வருவதைத் தடுக்கும்.
- மாதுளை குழந்தைகளின் பற்களில் உள்ள பிரச்சனைகளைப் போக்க உதவும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-வைரஸ் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் தான் காரணம்.
- மாதுளையில் பாக்டீரியா, நுண்ணுயிரிகள் மற்றும் அழற்சிகளை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது. ஆகவே இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம், அவர்களது உடலானது நோய்க்கிருமிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படும்.
- உடலில் நைட்ரிக் ஆக்சைட் (Nitric Oxide) என்னும் தனிமம் குறையும்போது, மனஅழுத்தம் ஏற்படும். மாதுளை, நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும் தன்மைகொண்டது. இதைச் சாப்பிட்டால், மனஅழுத்தம் குறையும்.
- உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும்.
- மாதுளையில் உள்ள எல்லஜிக் அமிலம் (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும்.
- மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதாலும், அதன் விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை, காயங்களின் மீது தடவுவதாலும் காயம் விரைவில் குணமாகும். அத்துடன் தழும்புகளும் மறையும்.
- மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.
- தினமும் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும், ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.
- முதுமையை தள்ளிப்போடும் பெரும்பாலான ஆன்டி ஏஜிங் சீரம் மாதுளம்பழத்தின் கொட்டைகளில் இருந்துதான் தயாராகிறது. பழமாகச் சாப்பிடும்போது அதைவிட அதிகப் பலன்கள் கிடைக்கும்.
- கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும்.
- மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.
- திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்னை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.
- பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம். அது, உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும், எலும்புகள் வலுப்பெற உதவும்.
- இரத்த அழுத்தம் பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மாதுளம்பழச் சாற்றை அருந்தினால், ரத்த அழுத்தம் குறையும்.
- ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த மாதுளம்பழத்தை உண்பதால், ஈறுகள் மற்றும் பற்களில் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிகின்றன.
- தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை பருகிவந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் பெறும்.
- மாதுளம் பிஞ்சைக் காயவைத்துப் பொடிசெய்து ஏலக்காய் தூள், கசகசாத் தூள், குங்கிலியத்தூள் ஒரு கிராம் அளவாகச் சேர்த்து தினம் இரு வேளை கொடுத்தால் சீதக் கழிச்சல் குணமாகும்.
- மாதுளை பூவின் சாறும் அறுகம்புல்லின் சாறும் ஓரளவு சேர்த்துக் கொடுக்க மூக்கில் இருந்து குருதி வடிவது நிற்கும்.
மாதுளைபழத்தின் மகிமை
Reviewed by Author
on
January 28, 2019
Rating:
No comments:
Post a Comment