7 பேர் பலி! சிறுவர்களுடன் பயங்கரமான விபத்தில் சிக்கிய வேன்:
அமெரிக்காவின் புளோரிடாவில் கெய்ன்ஸ்வில்லி அருகே உள்ள அதிவேக சாலை பகுதியில் பயங்கரமான விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், வேன் மீது தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட ஆரம்பித்தனர்.
இதில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், விபத்தில் சிக்கிய வேனில் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு டிஸ்னி வேர்ல்ட் ரிசார்ட்டிற்கு எடுத்து சென்றதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்தின் போது வேனில் இருந்த டீசல் பகுதி வெடித்து சிதறியிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.
தற்போது இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
7 பேர் பலி! சிறுவர்களுடன் பயங்கரமான விபத்தில் சிக்கிய வேன்:
Reviewed by Author
on
January 05, 2019
Rating:

No comments:
Post a Comment