"சங்ககாராவின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்த கோஹ்லி!
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று அடிலெய்டில் நடைபெற்றது.
இப்போட்டியில் டோனி மற்றும் கோஹ்லியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.
123 பந்துக்கு 131 ஓட்டங்கள் குவித்த கோஹ்லி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

கோஹ்லிக்கு நேற்று அடித்த சதம் 63-வது சதமாகும். இதன்மூலம் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை சங்கக்கராவுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த பட்டியலில் 100 சர்வதேச சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும் 71 சதங்களுடன் பாண்டிங் இரண்டாமிடத்திலும் 63 சதங்களுடன் மூன்றாமிடத்தில் இருந்த சங்ககாராவை கோஹ்லி பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்துள்ள வீரர்கள் பட்டியல்
சச்சின் டெண்டுல்கர் – 100 சதம்ரிக்கி பாண்டிங் – 71 சதம்
விராட் கோஹ்லி – 64* சதம்
குமார் சங்ககாரா – 63 சதம்
ஜெக் காலிஸ் – 62 சதம்.

"சங்ககாராவின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்த கோஹ்லி!
Reviewed by Author
on
January 16, 2019
Rating:
No comments:
Post a Comment