அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளைப்படுதலா? மூல நோயா? இது மட்டும் போதுமே -


"தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும்
அருகம்புல் திரிதோஷம், கோழை, கண்ணோய், சிரங்கு, சிரஸ்தாபம், ரத்த பித்தம், மருந்துசுடு, வயிற்றுபுண், வெள்ளை இப்படிபட்ட வியாதிகளுக்கு அருமருந்தாக விளங்குகிறது.
அருகம்புல்லின் மருத்துவகுணங்களை பார்ப்போம்.
  • அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு சேகரித்துச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை, ஒன்றிரண்டாக நறுக்கி, 4 டம்ளர் தண்ணீரில் இட்டு, சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து, 1 டம்ளராகக் காய்ச்சி, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து, இளஞ்சூடாக, தினம் இரண்டு வேளைகள் குடித்து வரவேண்டும். அதனை தொடர்ந்து செய்து வந்தல் வெள்ளைப்படுதல் பிரச்சனை படிப்படியாக தீரும்.
  • தேவையான அளவு அருகம்புல் சேகரித்துக் கொண்டு, சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து, உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். சொறி, சிரங்கு, புண்கள், படர்தாமரை, உடல் அரிப்பு குணமாகும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்து வரலாம்.
  • ஒரு கைப்பிடி அளவு பசுமையான அருகம் புல்லைச் சேகரித்துக் கொண்டு, நீரில் கழுவி, அரைத்து, காலையில் மட்டும் காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து குடிக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை இவ்வாறு செய்யலாம். நரம்புத் தளர்ச்சி கட்டுப்படும்.
  • அருகம் சாறு 20 மி.லி. அளவு, தண்ணீர் 20 மி.லி., தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
  • சிரங்கு பிரச்சனை இருப்பவர்கள் அருகம்புல் மற்றும் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசி, 1 மணிநேரம் நன்கு காய்ந்த பிறகு குளித்து வந்தால் நல்ல தீர்வு காண முடியும். தொடர்ந்து செய்து வந்தால் உடலில் உள்ள சிரங்குகள் முழுமையாக குணமாகும்.
  • இலைகளின் சாறு குளிர்ந்த தன்மையுடையது. இதனை பாலுடன் கலந்து பருகினால் மூலநோய் ரத்த கசிவு குணமாகும். சிறுநீர் கழிப்பு உறுப்புகளின் எரிச்சலை போக்கும். வேர்களை அரைத்து தயிரில் கலந்து பருகினால் புறமேக நோய் குணமாகும்.
  • அருகம்புல்லும், வில்வ இலையும் சேர்த்து சாறு பிழிந்து காலை, மாலை இருவேளை 1 அவுன்ஸ் அளவு குடித்து வந்தால் உடல் வலி நீங்கும். தாய்பால் குறைவாக சுரக்கும் பெண்கள், அருகம்புல்லுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், தாய் பால் அதிகம் சுரக்கும்.
  • மாதுளம் மற்றும் அருகம்புல் சாறு இதை இரண்டையும் சம அளவு கலந்து 30 மில்லி அளவு மூன்று வேலை பருகி வந்தால் மூக்கில் இரத்தம் வழியும் பிரச்சனைக்கு தீர்வுக் காணலாம். அருகம்புல் சாற்றை தினமும் காலை 10 மில்லி அளவு குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  •  
வெள்ளைப்படுதலா? மூல நோயா? இது மட்டும் போதுமே - Reviewed by Author on January 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.