தைத்திருநாள்.....தமிழர்களின் பெருநாள்
தைத்திருநாள்
தைரியம் தரும் நன்நாள்
தனிப்பொங்கல் எனும்
தமிழர்களின் பெருநாள்
நாற்றிசையும்
நாதமிசைக்கும்-நெல் மணிகள்
நாற்றினிலே -உழவன்
நாம் வாழ சேற்றினிலே....
நாவுக்குருசியாய் கைவைப்போம் சோற்றினிலே....
நன்மை செய்யும் இயற்கைக்கும்
நலமாய் வாழவைக்கும் இறைவனுக்கும்
நம் முன்னோர் கண்டுகொண்ட விழாக்கல் பலவுண்டு
நயமாய் சுயமாய்-பொங்கலிலும்
நான்கு வகையுண்டு....
புதியன புனைதல் போகிப்பொங்கலாம்
பூமியினில் ஒளிவீசும் பகலவனுக்கும் பொங்கல்
பூமனம் கொண்ட ஆவினத்திற்கும் பட்டிப்பொங்கல்
புன்னகை பொன்னகையாகும் உறவுகளுடன்-காணும் பொங்கல்
உலகம் முழுதும்
உழுது உணவு தரும்
உழவனுக்கும் இறைவனுக்கும்
உன்னதமான ஒரு நாளாய்-தைப்பொங்கல்
ஊருக்குள்ளும்
உறவுக்குள்ளும்
உனக்குள்ளும் எனக்குள்ளும்
உள்ளத்திலே அன்பு நம்பிக்கை ஒற்றுமை-பொங்கட்டும்
ஊற்றாக தமிழர் தாயகம் தென்றல் கீற்றாக...
தமிழரின் புத்தாண்டு
தமிழுக்கு சிறப்பாண்டு
தனிமையே இனிமை கண்டு
தமிழ் போல் தைத்திருநாளும் கற்கண்டு
தமிழ் அன்னையே நீ மகிழ்வுண்டு
தமிழரும் தாயகம் வாழவேண்டும் பல்லாண்டு...
கவிஞர் வை.கஜேந்திரன்-
தைரியம் தரும் நன்நாள்
தனிப்பொங்கல் எனும்
தமிழர்களின் பெருநாள்
நாற்றிசையும்
நாதமிசைக்கும்-நெல் மணிகள்
நாற்றினிலே -உழவன்
நாம் வாழ சேற்றினிலே....
நாவுக்குருசியாய் கைவைப்போம் சோற்றினிலே....
நன்மை செய்யும் இயற்கைக்கும்
நலமாய் வாழவைக்கும் இறைவனுக்கும்
நம் முன்னோர் கண்டுகொண்ட விழாக்கல் பலவுண்டு
நயமாய் சுயமாய்-பொங்கலிலும்
நான்கு வகையுண்டு....
புதியன புனைதல் போகிப்பொங்கலாம்
பூமியினில் ஒளிவீசும் பகலவனுக்கும் பொங்கல்
பூமனம் கொண்ட ஆவினத்திற்கும் பட்டிப்பொங்கல்
புன்னகை பொன்னகையாகும் உறவுகளுடன்-காணும் பொங்கல்
உலகம் முழுதும்
உழுது உணவு தரும்
உழவனுக்கும் இறைவனுக்கும்
உன்னதமான ஒரு நாளாய்-தைப்பொங்கல்
ஊருக்குள்ளும்
உறவுக்குள்ளும்
உனக்குள்ளும் எனக்குள்ளும்
உள்ளத்திலே அன்பு நம்பிக்கை ஒற்றுமை-பொங்கட்டும்
ஊற்றாக தமிழர் தாயகம் தென்றல் கீற்றாக...
தமிழரின் புத்தாண்டு
தமிழுக்கு சிறப்பாண்டு
தனிமையே இனிமை கண்டு
தமிழ் போல் தைத்திருநாளும் கற்கண்டு
தமிழ் அன்னையே நீ மகிழ்வுண்டு
தமிழரும் தாயகம் வாழவேண்டும் பல்லாண்டு...
கவிஞர் வை.கஜேந்திரன்-
தைத்திருநாள்.....தமிழர்களின் பெருநாள்
Reviewed by Author
on
January 15, 2019
Rating:

No comments:
Post a Comment