தமிழ்ர்களின் பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வல்ல! ரணில் விக்ரமசிங்க
இனப்பிரச்சினைக்கு சமஷ்டியின் மூலம் தீர்வு காண முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒன்றுபட்ட நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் இப்போது, பிளவுபடாத இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண முடியுமென ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆகையினால் சமஷ்டியை உருவாக்க முயற்சிக்காமல் இதனை முன்னெடுக்க வேண்டும். இதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும், பொதுவாக்கெடுப்பில் அங்கீகாரமும் பெற வேண்டும்.
தேசியப் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணப்படுவது தான் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது. இந்த முயற்சியை சீர்குலைக்க எவரையும் அனுமதிக்கக் கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்ர்களின் பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வல்ல! ரணில் விக்ரமசிங்க
Reviewed by Author
on
January 30, 2019
Rating:

No comments:
Post a Comment