அண்மைய செய்திகள்

recent
-

முதலில் தமிழர்களுக்கு தீர்வு..... அப்போது மட்டுமே மத்திய அரசுடன் இணைவு! சி.வி.விக்னேஸ்வரன் -


தமிழர்களுக்கான உரிமைகளை அரசாங்கம் முதலில் அளிக்க வேண்டும். அதன் பின்னரே, மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியுமென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் தென்னாசியத் திணைக்களத் தலைவர் Fergus Auld வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை இன்று காலை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது குறித்த விடயத்தினை தெளிவுப்படுத்தியுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் திரும்பவும் கையளிக்கப்பட்டதன் பின்னரே தேசிய நீரோட்டத்தினுள் உள்ளீர்க்கப்பட்டு செயலாற்ற முடியும்.
தமிழர்களை நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகளாக்கிவிட்டு, அரசியல் நீரோட்டத்துடன் சேரச் சொல்வது முறையானதல்ல. ஆனால் முதலில் தமிழர்களை கிணற்றினுள் இருந்து வெளியே கொண்டு வரவேண்டும்.
அத்துடன், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி முறையிலான ஒரு தீர்வை அளிக்க பிரித்தானியா தனது முழு அழுத்தையும் வழங்கவேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது புதிய அரசியல் அமைப்பு உள்ளிட்ட சமகால விடயங்கள் குறித்தும் புதிய அரசியல் கட்சியை தொடங்கியதற்கான காரணம் குறித்து விக்னேஸ்வரனிடம் பிரித்தானிய பிரதிநிதிகள் வினவியுள்ளனர்.
சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பின் நிறைவில் தனது எதிர்கால பணிகளுக்கு பேர்கஸ் வாழ்த்து தெரிவித்தாகவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
முதலில் தமிழர்களுக்கு தீர்வு..... அப்போது மட்டுமே மத்திய அரசுடன் இணைவு! சி.வி.விக்னேஸ்வரன் - Reviewed by Author on January 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.