டிரம்பை சந்திக்க ஏற்பாடு செய்ய வடகொரிய ஜனாதிபதி உத்தரவு -
அணு ஆயுதங்களைக் கைவிடுவது தொடர்பாக, கடந்த ஆண்டு சிங்கப்பூரில் டிரம்ப்-கிம் ஜாங் உன் ஆகியோரின் சந்திப்பு முதன் முதலாக நடந்தது. எனினும் அந்த சந்திப்புக்கு பின் அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக டிரம்ப்-கிம் ஆகியோரின் சந்திப்பு நடைபெற உள்ளது. பிப்ரவரி மாத இறுதியில் இந்த சந்திப்பு நடக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கொடுத்த கடிதம் ஒன்றை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னிடம் அந்நாட்டு தூதர் வழங்கினார். அதில் இரண்டாவது முறையாக கிம்மை சந்திக்க விருப்பம் உள்ளதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் இந்த சந்திப்பிற்காக பெருமையுடனும், நம்பிக்கையுடனும் காத்திருப்பதாக கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
டிரம்பை சந்திக்க ஏற்பாடு செய்ய வடகொரிய ஜனாதிபதி உத்தரவு -
Reviewed by Author
on
January 25, 2019
Rating:

No comments:
Post a Comment