உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனையில் வெற்றி! -
குறித்த ஆகாய கப்பல் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில், குறித்த ஆகாய கப்பல் சோதனையில் வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகாமை ‘ஏர்லேண்டர்’ என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பலைத் தயாரித்துள்ளது.
92 மீற்றர் உயரமும், 44 மீற்றர் அகலமும் கொண்ட குறித்த ஆகாய கப்பல், கடந்த 2017ம் ஆண்டு பரிசோதிக்கப்பட்டபோது அது விபத்துக்குள்ளானது. அதில் பெண் ஒருவரும் கடுகாயமடைந்திருந்தார்.
இந்நிலையில், குறித்த ஆகாய கப்பல் 25 மில்லியன் யூரோ செலவில் புனரமைக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
சோதனை வெற்றியடைந்துள்ள நிலையில், பயணிகளை ஏற்றிக்கொண்டு பறப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகாமை மேலும் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனையில் வெற்றி! -
Reviewed by Author
on
January 15, 2019
Rating:

No comments:
Post a Comment