மன்னார் மனித புதைகுழி-சந்தேகத்திற்க்கு இடமான சிறு மனித எச்சம்-படங்கள்
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 145 ஆவது தடவையாக இன்று 14-02-2019 காலை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்று வருகின்றது
குறித்த மனித புதைகுழியில் தொடர்ச்சியாகவும் மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டும் அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றது. இந்த நிலையில் இன்று சந்தேகத்திற்கு இடமான சிறு பிள்ளை ஒன்றின் மனித எச்சம் மீட்க்கப்பட்டுள்ளது குறித்த மனித எச்சதிலோ அல்லது அருகிலோ உலோக பொருள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்துள்ளது
தற்போது குறித்த சிறு மனித எச்சம் முழுமையாக மீட்கப்பட்டு சுத்தப்படுத்துவதற்காக மத்திய பகுதியில் வைக்கப்பட்டுள்ளது குறித்த எச்சம் 18 வயதுக்குட்பட்ட சிறுவனுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதே நிலையில் இன்றைய தினம் குறித்த புதைகுழி தொடர்பான ஆய்வு முடிவுகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் தற்போதுவரை ஆய்வு முடிவுகள் வெளிவரவில்லை இன்று மாலைக்குள் அல்லது நாளை முடிவுகள் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுவரை குறித்த மனித புதைகுழியில் 316 மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 307 மேற்ப்பட்ட மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
மன்னார் மனித புதைகுழி-சந்தேகத்திற்க்கு இடமான சிறு மனித எச்சம்-படங்கள்
Reviewed by Author
on
February 14, 2019
Rating:
Reviewed by Author
on
February 14, 2019
Rating:






No comments:
Post a Comment