டான்சிலை அடியோடு விரட்டும் சீரகம்.. இப்படி குடிங்க -
டான்சிலிட்டிஸ் எனப்படுவது நமது அடி நாக்கில் உள்ள இரண்டு சிறிய திசு பகுதியானது வைரஸ் தொற்று அல்லது பாக்டீரியா தொற்றினால் பாதிக்கப்படுவதே ஆகும்.
இது ஏற்பட ஸ்டெப்டோகோகஸ், ஹிமோபில்ஸ் ஆகிய பாக்டீரியாக்கள் தான் காரணம்.
அதுபோல, அடெனோவைரஸ், எப்ஸ்டின் - பார் ஆகிய வைரஸ்கள் காரணமாக உள்ளன. இந்த பாக்டீரியா, வைரஸ்கள், அடுத்தவரிடம் இருந்தும் சில காரணங்களாலும் தொற்றும்.
இதற்கு மருந்துகள் தான் குடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு நாம் வீட்டில் இருக்கும் சமையல் அறை பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- சீரகம் - 1 தேக்கரண்டி
- இஞ்சி (சிறு துண்டுகளாக வெட்டப்பட்டது) - 1 தேக்கரண்டி
- காக்னக் பிராண்டி அல்லது விஸ்கி (விரும்பினால், குளிர்காலத்திற்கு ஏற்றது) - 1 டீஸ்பூன்
- தண்ணீர் -1 டம்ளர்
செய்முறை
முதலில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கும் பொழுது, சீரகம் மற்றும் துண்டுகளாக வெட்டப்பட்ட இஞ்சியை சேர்க்கவும்சுமார் 15 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைக்கவும் அல்லது சற்று திக்காக வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்
அதன் பிறகு சாற்றை வடிகட்டவும் . இப்போழுது வடிகட்டிய சாற்றில் மீண்டும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, கொதிக்க விடவும்
நீங்கள் விஸ்கி அல்லது காக்னக் பயன்படுத்த விரும்பினால், இப்போது 1 டீஸ்பூன் சேர்க்கவும் பிறகு சிறிது சூடு குறையுமளவு ஆற விடவும்.
இவ்வாறு தயார் செய்த கஷாயத்தை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1 டீஸ்பூன் எடுத்து கொள்ளவும்.
நீங்கள் 3-4 மணி நேரத்தில் நிவாரணம் பெறலாம், குணமடைந்து விட்டால் 4 மணி நேரத்திற்குப் பிறகு நிறுத்தி விடவும். இல்லையெனில், அடுத்த 3-4 மணி நேரத்திற்கும் ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் எடுத்துக்கொள்ளவும்.
டான்சிலை அடியோடு விரட்டும் சீரகம்.. இப்படி குடிங்க -
Reviewed by Author
on
February 15, 2019
Rating:
Reviewed by Author
on
February 15, 2019
Rating:


No comments:
Post a Comment