தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்! யாழில் வைத்து ரணில் தெரிவிப்பு -
அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவின் முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டே ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதிகார பகிர்வு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி உடன்படிக்கை எதனையும் செய்துகொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க,
“புதிய அரசியல் அமைப்பின் மூலம் தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. எனினும், ஒரு அரசியல் வரைபு இதுவரையிலும் தயாராகவில்லை.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அதிகார பகிர்வு தொடர்பில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவின் முன்மொழிவுகளை ஆதரித்தவர்கள் இன்று அதனை எதிர்க்கின்றனர்.
நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக வடக்கு பகுதி மக்கள் 2015ஆம் ஆண்டில் ஆதரவு வழங்கியிருந்தனர். இந்நிலையில், தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்! யாழில் வைத்து ரணில் தெரிவிப்பு -
Reviewed by Author
on
February 15, 2019
Rating:

No comments:
Post a Comment