பற்சொத்தையா? இதோ ஒரு உடனடி நிவாரணம் -
பற்களில் உள்ள அழுக்கு, உணவுகள், தகடுகள் போன்றவை நீக்கப்பட்டு விடும். தகடுகள் போன்றவை நீண்ட காலமாக பற்களில் தங்குவதால் பாக்டீரியாவை உருவாக்கி அது உங்கள் எனாமலை அரித்து விடும். இது பற்சொத்தை வர முக்கிய காரணமாகும்.
இது வந்தாலே நம்முடைய பாதி உயிரையே எடுத்துவிடுகின்றது.
பற்சொத்தை நன்கு ஏற்பட்டுள்ளதற்கு முதல் அறிகுறி பல்வலியாகும். இனிப்பு மற்றும் சூடு அல்லது குளிர்ச்சி மிகுந்த உணவால் வலி அதிகமாகும். வாய் துர்நாற்றமும் ஏற்படும்.
இதனை தடுக்க வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்களே போதும்.
பற்சொத்தையை சரியாக்குவதற்கும் வராமல் தடுப்பதற்கும் ஒரு அற்புதமான இயற்கை முறை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கிராம்பு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- பூண்டு ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு பெளலில் கலந்து கொள்ள வேண்டும்.அதை பேஸ்ட் மாதிரி கலக்க வேண்டும்
இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட பற்களில் கைகளால் அல்லது காட்டன் பஞ்சை கொண்டு வைக்க வேண்டும்.
இந்த முறையை ஒவ்வொரு நாள் இரவிலும் 2 மாதங்களுக்கு செய்ய வேண்டும்
கண்டிப்பாக இந்த முறை உங்களை பற்சொத்தையிலிருந்து விடு பட வைக்கும்.
இந்த முறை உங்கள் பற்சொத்தையை குணப்படுத்தும். ஆனால் இதை தொடர்ந்து எடுத்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு
சர்க்கரை பொருட்கள், சாக்லேட், ஐஸ் க்ரீம், கார்பனேற்ற பானங்கள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.நீங்கள் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக ஒவ்வொரு தடவையும் பல்துலக்குதல் மற்றும் வாயை கொப்பளித்தல் போன்றவற்றை வாரத்திற்கு 4 நாட்களாவது மேற்கொள்ள வேண்டும்.
மேலும் கால்சியம் நிறைந்த உணவுகளான கீரைகள் மற்றும் பால் பொருட்கள் சாப்பிட வேண்டும். இது உங்கள் பற்சொத்தையை எதிர்த்து போராடும்.
பூண்டு, கிராம்பு எண்ணெய் மற்றும் உப்பு இவைகளில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் பற்களில் உள்ள கிருமிகளை அழித்து அதன் எண்ணிக்கையை குறைக்கிறது. மேலும் பற்களை சுத்தம் படுத்தி பற்சொத்தை வராமல் தடுக்கிறது.

பற்சொத்தையா? இதோ ஒரு உடனடி நிவாரணம் -
Reviewed by Author
on
February 04, 2019
Rating:
No comments:
Post a Comment