தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பதவிக்காக முக்கோண மோதல்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பில் நெருக்கடியான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டமைப்பின் சமகால தலைவரான 86 வயதான ஆர்.சம்பந்தன் செயற்பட்டு வருகிறார். இந்நிலையில் கட்சியின் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதில் முன்கோண மோதல் ஒன்று உருவாகியுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் தலைமைப் பதவியை பெற்றுக் கொள்வதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோருக்குள் இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
வடக்கில் பிறந்த ஒருவரே கட்சியின் தலைவராக வேண்டும் என்பது அந்த கட்சியின் முக்கிய விடயமாக கருதப்படுகிறது.
சம்பந்தனுக்கு அடுத்தபடியாக உள்ள மாவை சேனாதிராஜாவும் உடல்நல குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராகவும் அவர் செயற்பட்டு வருகிறார்.
சுமந்திரனுக்கு புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு கிடைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகள் சுமந்திரனுக்கு எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மறுபக்கதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என சரவணபவன் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் கட்சியின் தலைமைப் பதவியை பெற்றுக்கொள்வதில் மும்முனையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பதவிக்காக முக்கோண மோதல்!
Reviewed by Author
on
February 17, 2019
Rating:

No comments:
Post a Comment