வடக்கில் போதை பொருட்கள் விதைக்கப்பட்டுள்ளன-கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் போதை பொருட்களை விதைதார்கள்
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அரசியல் வாதிகளாலே அதிக அளவில் போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்
02-02-2019 நேற்றைய தினம் அடம்பன் மகாவித்தியாலயத்தில் இடம் பெற்ற 2019 ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
நெல்லை அறுவடை செய்ய விதைப்பது போல் வடக்கில் போதை பொருட்களை விதைதிறுக்கின்றார்கள் இதற்கு காரணம் அரசியல் வாதிகள் தங்களுடைய சுய லாபத்திற்காக தங்களுடைய வாகனங்களிலே போதை பொருட்களை கொண்டு செல்கின்றார்கள் உண்மையிலேயே அரசியல் வாதிகளுடைய வாகனங்கள் பெரிதும் சோதிக்கப்படுவதில்லை பாரளுமன்ற உறுப்பினர் அமைச்சர் என்று குறிப்பிடும் போது பொலிஸ் அதிகாரிகள் வாகனங்களை சோதனையிடுவதில்லை அந்த வாகனத்தில் என்ன போகின்றது என்பது தெரியாது.
இப்படிதான் கடந்த காலங்களில் போதை பொருட்கள் அதிகம் எமது பிரதேசங்களுக்குள் வந்ததாக தெரிவித்தார்.
இதை பல இடங்களில் கண்டு பிடித்துள்ளோம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
இதை நிச்சயமாக நிறுத்த வேண்டும் இதனால் தான் சிறுவர் துஸ்பிரயோகம் பாலியல் வல்லுறவு போன்ற பிரச்சினைகள் அதிகரித்து இருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.
அபிவிருத்திகள் இந்த நல்லாட்ச்சி அரசாங்கத்தில் நமக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம் அதை நல்ல முறையில் பயன்படுத்தி இருக்கின்ற வளங்களை எமது மக்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டிய நேரம் இது இப்போதும் நாம் சும்மா இருக்காமல் எம்மால் முடிந்தளவு எமது மக்களுக்காக இடைவிடாது பணியாற்ற ஒவ்வொருவரும் முன்வரவேண்டும் என்றார்.

Reviewed by Author
on
February 03, 2019
Rating:

No comments:
Post a Comment