157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்..பயணிகளின் விபரம் வெளியானது!
Ethiopian Airlines Boeing 737 பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை எத்தியோப்பியாவின் தலைநகர் Addis Ababa-விலிருந்து கென்யாவின் Nairobi நகருக்கு 149 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் புறப்பட்டுச் சென்றது.

அப்போது சரியாக உள்ளூர் நேரப்படி காலை 8.38 மணிக்கு புறப்பட்ட விமானம் அடுத்த சில நிமிடங்களில் அதாவது 8.44 மணிக்கு கட்டுப்பாட்டு அறையின் தொடர்பிலிருந்து விலகியுள்ளது. இதனால் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் முதல் கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விபத்தில் சிக்கிய விமான நிறுவனத்தின் தலைவர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்துள்ளதாகவும், அவர் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் இறந்தவர்கள் குறித்து எந்த் ஒரு அதிகாரப்பூர்வமான தகவல் அறிவிக்கப்படாத நிலையில், அவர் இப்படி கூறியிருப்பது, விபத்தில் பயணிகள் இறந்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
மேலும் இந்த விபத்திற்கு முக்கிய காரணம் விமான நிலைதடுமாறியுள்ளது எனவும், அதன் காரணமாகவே விமானம் செங்குத்தாக கீழே விழுந்து விபத்தில் சிக்கியுள்ளது என்று ஸ்வீடனின் கண்காணிப்பு விமான வலைத்தலம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி விமானவிபத்தில் 33 நாடுகளைச் சேர்ந்த மக்கள் பயணித்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதில் 8 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் எனவும் 7 பேர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய பயணிகளின் மொத்த விபரம்
- 32 கென்யா
- 18 கனடா
- 9 எத்தியோப்பியா
- 8 சீனா
- 8 இத்தாலி Italian
- 8 அமெரிக்காUS
- 7 பிரித்தானியா
- 7 பிரான்ஸ்
- 6 எகிப்து
- 5 நெதர்லாந்து
- 4 யூ.என்.பாஸ்போர்ட்
- 4 இந்தியர்கள்
- 3 ரஷ்யா
- 2 மோரோக்கோ
- 2 இஸ்ரேல்

157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்..பயணிகளின் விபரம் வெளியானது!
Reviewed by Author
on
March 11, 2019
Rating:
No comments:
Post a Comment