16 வயதில் உலக அளவில் சாதித்த தமிழன் -
இவர் தோற்கடித்தது உக்ரைன் நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பொடோர்சக் என்பவரை தான்.
இதன் மூலம் இந்தியாவின் 61வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
யார் இந்த இனியன் பன்னீர்செல்வம்?
ஈரோட்டின் இந்தியன் பப்ளிக் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் இனியன்.5 வயதிலிருந்து செஸ் விளையாடி வரும் இனியனுக்கு, சக்திவேல் என்பவர் தொடர்ச்சியாக பயிற்சி வழங்கியுள்ளார்.
இவரது பயிற்சியின் கீழ் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் அண்டர்-8 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு முதல் ஒளிரும் ஈரோடு அமைப்பு இவருக்கு ஸ்பான்சராக இருக்க தன்னால் சாதிக்க முடிந்தது என பெருமிதத்துடன் கூறியுள்ளார் இனியன்.
இந்நிலையில் பிரபல செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் இனியனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
16 வயதில் உலக அளவில் சாதித்த தமிழன் -
Reviewed by Author
on
March 13, 2019
Rating:

No comments:
Post a Comment