23 வயதில் மரணமடைந்த உலக சாம்பியன் வீராங்கனை!
அமெரிக்காவைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின்(23). கடந்த 2016, 2017, 2018ஆம் ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இவர், 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற அமெரிக்க அணியில் அங்கம் வகித்தார்.
சைக்கிள் பந்தயத்தில் தொடர்ந்து சாதனை படைத்து வந்த கேட்லின், கடந்த ஆண்டு அடுத்தடுத்து விபத்துக்களால் பாதிக்கப்பட்டார். இதனால் லேசான மூளை அதிர்ச்சியடைந்ததால் மருத்துவமனையில் கேட்லின் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் கேட்லின் தற்கொலைக்கு முயன்றதால் அவரது நுரையீரல் மற்றும் இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் சைக்கிள் பந்தயத்தில் இருந்து விலகினார்.
இந்நிலையில், கெல்லி கேட்லின் கடந்த வியாழக்கிழமை மரணம் அடைந்ததாக அவரது சகோதரர் கொலின் சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க சைக்கிள் சங்கம் கேட்லினின் மரணத்தை உறுதி செய்தது. மேலும் தங்களது இரங்கலையும் தெரிவித்துள்ளது.

23 வயதில் மரணமடைந்த உலக சாம்பியன் வீராங்கனை!
Reviewed by Author
on
March 13, 2019
Rating:
No comments:
Post a Comment