மன்னார் முசலி பகுதியில் 218 குடும்பங்களின் மீள் குடியேற்றத்தை தடுக்கும் கடற்படை-படங்கள்
யுத்ததின் போது மன்னார் முசலி பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தாங்கள் மீண்டும் முசலி பகுதிக்கு மீள் குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் வந்தும் கடற்படையினர் எமது காணிகளை ஆக்கிரமித்திருப்பதால் தாங்களும் எங்களுடன் சேர்ந்த 218 மேற்பட்ட குடும்பங்களும் மீள் குடியேற்றப்பட முடியாத நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் குறித்த முசலி பகுதியில் அனேக அரச காணிகள் இருக்கும் போது தங்களுக்கு சொந்தமான காணி உறுதியுடைய காணிகளை கடற்படை ஆக்கிரமித்து இருப்பது தொடர்பில் மக்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர்
அதே நேரத்தில் தங்கள் போராட்டம் தொடங்கி ஒரு மாதம் கடக்க போகின்ற நிலையில் பிரதேச செயளாலர்களோ மாவட்ட அரசங்க அதிபரோ எங்களுடைய பிரச்சினை தொடர்பாக எங்களை சந்திக்கவோ கேட்டறியவோ இல்லை எனவும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்
போராட்டம் தொடங்கிய அன்றே தாங்கள் பிரதேச செயளாலருக்கு மகஜர் கையலித்த போதும் இதுவரை பிரதேச செயளாலரோ பிரதேச சபை பிரதிநிதிகளோ எங்களை சந்திக்காதது எங்களுக்கு மிகவும் வேதனை அழிக்கின்றது ஆனலும்
யார் வருகின்றார்களோ இல்லையோ எங்கள் காணிகளை மீட்கும் வரை எங்கள் போரட்டம் தொடரும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் நேற்றைய தினம் மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோ சார்பாக அதன் குழு தலைவர் யாட்சன் தலைமையில் போரட்டத்தில் ஈடுபட்ட மக்களுடனான சந்திப்பு ஒன்று இடம் பெற்றது குறித்த சந்திப்பில்
போரட்டத்தை தொடர்சியாக முன்னெடுப்பது தொடர்பாகவும் அதே நேரத்தில் போரட்டத்தில் ஈடுபடும் மக்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் கடற்படையினரால் ஏற்படுத்த படும் அச்சுறுத்தல் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

மன்னார் முசலி பகுதியில் 218 குடும்பங்களின் மீள் குடியேற்றத்தை தடுக்கும் கடற்படை-படங்கள்
Reviewed by Author
on
March 12, 2019
Rating:

No comments:
Post a Comment