மன்/ஈச்சளவக்கை அ.த.க.பாடசாலைக்கு இரண்டு தங்க மற்றும் வெண்கல விருதுகள்-படங்கள்
கல்வி அமைச்சினால் நடாத்தப்படுகின்ற சிறுவர் மெய்வல்லுநர் போட்டி- செயட்பட்டு மகிழ்வோம் (2019.03.11) கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
மன்னார் மடுவலயத்தினை சேர்ந்த மன்/ஈச்சளவக்கை அ.த.க. பாடசாலை யின் 2018 தரம் 3அணி வெண்கல விருது. தரம்4 அணி தங்க விருது. தரம் 5அணி தங்க விருதினையும் அகில இலங்கை ரீதியில் வென்று சாதனை படைத்துள்ளனர்.
(2017 ஆண்டு தேசிய மட்ட செயற்பட்டு மதிழ்வோம் போட்டி தரம் 4 அணி தங்க விருது.தரம் 3அணி வெள்ளி விருது . பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.)
மன்/ஈச்சளவக்கை அ.த.க. பாடசாலை அதிபர் திரு.ஜோ.கியோமர் பயஸ்.
அவர்களுக்கும் பயிற்சி ஆசிரியர்கள் திருமதி சா.நியாஸா,திருமதி ச.சக்கீயா,திரு.த.பவகுகன்,செல்வி.சு.நிலூயனா.... மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
மன்னார் மாவட்டத்தில் இருந்து இரண்டு பாடசாலைகள் அதுவும் மடுவலயப்பாடசாலைகள் தேசிய ரீதியில் சாதித்துள்ளனர் பாராட்டுக்கள்.

-வை.கஜேந்திரன்-
மன்/ஈச்சளவக்கை அ.த.க.பாடசாலைக்கு இரண்டு தங்க மற்றும் வெண்கல விருதுகள்-படங்கள்
Reviewed by Author
on
March 13, 2019
Rating:

No comments:
Post a Comment