மன்னார் நானாட்டானில் 7 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்-முதியவர் ஒருவர் கைது.
மன்னார்- நானாட்டான் பிரதேசச் செயலாயளர் பிரிவுக்குற்பட்ட மடுக்கரை பகுதியில் சுமார் 7 வயதுடைய வயது சிறுமி ஒருவால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ளது.
துஸ்பிரயோகத்திற்கு உள்ளான குறித்த சிறுமி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மன்னார் வைத்திய சாலை உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முதியவர் ஒருவரை முருங்கன் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்கற்பட்ட மடுக்கரை கிரமத்தில் வசித்து வந்த ஏழு வயது சிறுமியினை யாரும் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த குறித்த முதியவர் சில தினங்களுக்கு முன்னர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிய வருகின்றது.
இதனையடுத்து குறித்த சிறுமி தனது பெற்றோருக்கு குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவித்ததை அடுத்தே குறித்த முதியவரை முருங்கள் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை முருங்கன் பொலிஸாரினால் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சிறுமி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 மன்னார் நானாட்டானில் 7 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்-முதியவர் ஒருவர் கைது.
 
        Reviewed by Author
        on 
        
March 27, 2019
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
March 27, 2019
 
        Rating: 


No comments:
Post a Comment