உலகில் இன்று இரவு 8.30க்கு நடக்கவுள்ள விடயம் -
இதற்கமைய இன்று இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை சர்வதேச ரீதியில் சகல தரப்பினரும் மின்சார பாவனையை தவிர்க்க திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கணிசமான மின் சக்தியை சேமிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, சுற்றாடலை பாதுகாக்கும் நோக்கில் உலகளாவிய ரீதியாக மில்லியன் கணக்கான மக்கள் இந்த திட்டத்திற்கு ஊக்கமளிக்க முன்வந்துள்ளனர்.
இந்த திட்டத்தை இலங்கையில் முன்னெடுப்பவர்கள், குறிப்பாக இலங்கை அரசாங்கம், வர்த்தகர்கள்,பொது அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோரின் முழுமையான ஆதரவினையும் வழங்க முன்வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'பூமியுடனான ஒரு மணி நேரம்' திட்டம் முதன் முறையாக கடந்த 2007ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் வருடாந்தம் உலகளாவிய ரீதியாக 187 நாடுகளை சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் அதிகமான நகரங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உலகில் இன்று இரவு 8.30க்கு நடக்கவுள்ள விடயம் -
Reviewed by Author
on
March 31, 2019
Rating:

No comments:
Post a Comment