கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான வீரர்!
காபோன் நாட்டின் தலைநகரான லிபரல்வில் Akanda FC மற்றும் Missile FC அணிகளுக்கு இடையிலான முதல் பிரிவு போட்டியின் போது தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஸ்ட்ரைக்கராக விளையாடி கொண்டிருந்த 30 வயதான ஹெர்மன் ஸிங்கா திடீரென மயங்கி தரையில் விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஆனால் வாகனம் தாமதமாகவே மைதானத்திற்கு வருகை தந்திருக்கிறது. பின்னர் அங்கு வந்த மருத்துவர் முதலுதவி சிகிச்சை கொடுத்து, மயக்க நிலையில் இருந்த ஹெர்மனை மீட்க முயற்சித்துள்ளார்.
ஆனால் எந்த பலனும் அளிக்காததால் வேகமாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் ஹெர்மன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஹெர்மன் இறந்ததற்கான காரணம் தெரியாத நிலையில், மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கின்றன.



கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான வீரர்!
Reviewed by Author
on
March 06, 2019
Rating:
No comments:
Post a Comment