ஜெனிவா விவகாரத்தை வேறுவிதமாக கையாளும் சிங்கள தமிழ் தரப்பு! தமிழர்களின் நிலை? -
ஜெனிவா விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு தமிழர் தரப்பும் சிங்கள தரப்பும் அரசியல் பிரச்சாரமே செய்கின்றதே தவிர தமிழ் மக்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க எவரும் தயாராக இல்லையென மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக சபையில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டத்தில் வெளிவிவகார அமைச்சு, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகளை பாதுகாத்து சர்வதேசம் முன்வைக்கும் குற்றங்களை ஆதாரத்துடன் நிராகரித்து வரவேண்டிய அரசாங்கம் இன்றும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் குற்றவாளிக் கூண்டில் இருந்தே பதில் கூருகின்றது.
இதேவேளை, ஜெனிவா விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு தமிழர் தரப்பும் சிங்கள தரப்பும் அரசியல் பிரச்சாரமே செய்கின்றது மாறாக தமிழ் மக்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க எவரும் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா விவகாரத்தை வேறுவிதமாக கையாளும் சிங்கள தமிழ் தரப்பு! தமிழர்களின் நிலை? -
Reviewed by Author
on
March 27, 2019
Rating:

No comments:
Post a Comment