வடக்கு மாகாண ஆளுநர் எடுத்துள்ள முக்கிய முடிவு! -
ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசாரணை மூலம் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் ஆவணம் யாரால் எழுதப்பட்டது என்பதை கண்டறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உதவியை நாடவுள்ளதாக வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்தவாரம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு (40/1) இற்கான இணை அனுசரணை வழங்குவது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்க முன்னாள் இராஜதந்திரியான சமந்தா பவரும், அமைச்சர் மங்கள சமரவீரவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
ஆனால் அதை எழுதியவர் யார் என்பது இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கும் நிலையிலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி அதை எழுதியவர் யார் என்பதை கண்டறிய முடிவுசெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகள் கட்டளையிட முடியாது என்றும். இலங்கை அரசாங்கம் ஜெனிவாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளை செயற்படுத்த தவறிவிட்டது என்று குறிப்பிடும் தரப்பினர் சர்வதேச நீதி பொறிமுறையினை நாட முயற்சிக்கின்றமை நாட்டுக்கு எதிரான செயற்பாடாகும் என்றும் அவர் நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண ஆளுநர் எடுத்துள்ள முக்கிய முடிவு! -
Reviewed by Author
on
March 27, 2019
Rating:

No comments:
Post a Comment