வாழ்வாதார செயற்பாடுகளுக்கு உறுதுணையாக அமைந்துள்ளது இரணைமடுக்குளம் -
பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக்குளம் புனரமைக்கப்பட்டு போதிய நீர் தேக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் தேவை பூர்த்தி செய்யப்பட்டது என்பதற்கு அப்பால் மாவட்டத்தின் குடி நீர்த் தேவை மற்றும் நன்னீர் மீன்பிடி, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட வாழ்வாதார செயற்பாடுகளுக்கு உறுதுணையாக அமைந்துள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளமான இரணைமடுக்குளத்தின் இவ்வாண்டுக்கான சிறுபோக பயிர்செய்கைக்கூட்டம இன்று மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்தின் பெரும் வளமான இரணைமடுக்குளம் நீண்ட காலத்திற்குப் பின்னர் முழுமையாக புனரமைக்கப்பட்டிருக்கின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மிக முக்கியமான வாழ்வாதாரத்தை வழங்குகின்ற வளமாகக் காணப்படுகின்ற இக்குளம் பல்வேறு தேவைகளை நிறைவேற்றுகின்றது.
அதாவது, விவசாயம், நன்னீர் மீன்பிடி, மாவட்டத்தில் காணப்படுகின்ற பல கிராமங்களுக்கான சுத்தமான குடிநீரை வழங்குகின்ற ஒரு வளமாகவும் அமைந்துள்ளது.
அத்துடன் கால்நடைகள் ஏனைய விலங்குகளின் குடி நீர்த் தேவைகளையும் இக்குளம் பூர்த்தி செய்கின்றது.
மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஊன்று கோலாக இக்குளத்தின் நீரை உரியவாறு பயன்படுத்தி வெற்றிகரமாக சிறுபோகச்செய்கை மேற்கொள்ள வேண்டியது அனைத்து விவசாயிகளினதும் பொறுப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
வாழ்வாதார செயற்பாடுகளுக்கு உறுதுணையாக அமைந்துள்ளது இரணைமடுக்குளம் -
Reviewed by Author
on
March 13, 2019
Rating:

No comments:
Post a Comment