விடுதலைப் புலிகளை வீழ்த்த சர்வதேசம் உதவ இதுவே காரணம்! இரா.சம்பந்தன் -
தமிழ் மக்கள் கோரிய அரசியல் தீர்வை தருவதாக கூறியதனால்தான் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முழு உலகமும் உதவியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“தமிழ் மக்கள் கோரிய அரசியல் தீர்வை தருவதாக கூறியதனால்தான் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முழு உலகமும் உதவியது.
இந்நிலையில், இரண்டு தரப்பினர்களும் அரசியல் தீர்வை அடைவதில் வெற்றிபெற்றிருந்தால் யுத்தத்தை தவிர்த்திருக்கலாம்.
எனினும், இலங்கை அரசு கூறியதை செய்யவில்லை. நியாயமான அரசியல் தீர்விற்காக தமிழ் மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ள நிலையில் இன்று அம்முயற்சி தோல்வியை நோக்கி செல்கின்றது.
வீண்விரயங்கள், ஊழல்கள் என்பன மலிந்துவிட்டமையே இதற்கு காரணம். எவ்வாறாயினும், இந்த தாம் உள்ளிட்ட தரப்பினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.
எப்படியாவது சமாளித்துக்கொண்டு போக நினைக்கின்றபோதும் அவ்வாறு செய்யமுடியாதுள்ளது. யுத்தத்தின் காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை வீழ்த்த சர்வதேசம் உதவ இதுவே காரணம்! இரா.சம்பந்தன் -
Reviewed by Author
on
March 13, 2019
Rating:

No comments:
Post a Comment