சரித்திரம் உனை சிந்திக்கும்.....கவிதை
சரித்திரம் உனை சிந்திக்கும்
கண்ணிமைக்கும்
நேரத்தில் கனவு காண்
காலத்தை வெல்வதே
உனது நினைவுதான்
மனத்திரையில்
மாசற்ற எண்ணங்களை பதிவேற்று
மகத்தான மனித வாழ்வை
மனமகிழ்வுடன் நிறைவேற்று
ஆசைக்கு இரைபோடு
அகிலத்தின் கரைதேடு
அதிசயம் காணும் வரை
அறியாமை திரை மூடு
ஆழமாக யோசி
அத்தனையும் நேசி
அமைதியாகப்பேசி
அன்பினாலே சுவாசி
முடிவு ஒன்றாய் இருக்கட்டும்
முதலே நன்றாய் இருக்கட்டும்
ஆழ் மனதை நீ ஆண்டாள்
ஆளலாம் நீ அழகான இவ்வுலகை
சாத்தியப்படாது எதுவும் -நீ
சரிந்து தூங்கினால்-எழு
சாதனை உனை சந்திக்கும்
சரித்திரம் உனை சிந்திக்கும்….
“கலைச்செம்மல்”கவிஞர்-வை.கஜேந்திரன்-
சரித்திரம் உனை சிந்திக்கும்.....கவிதை
Reviewed by Author
on
March 03, 2019
Rating:

No comments:
Post a Comment