முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! பொதுமக்கள் தலைமையில் -
முள்ளிவாய்க்கால் 10 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொதுமக்கள் தலைமையில் அனுஸ்டிப்பதற்கு கரைத்துறைப்பற்று பிரதேச சபை முழு அதரவு வழங்கவுள்ளதாக கரைத்துறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சு. தவராசா தெரிவித்தார்.
முல்லைத்தீவில் ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பிரதேசங்களில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் சிக்கிய பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொத்துக்குண்டுகள் உள்ளிட்ட கொடிய தாக்குதல்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கோரச்சம்பவங்களை நேரில் பார்த்து அனுபவித்த பொதுமக்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அனுஸ்டிப்பதே பொருத்தமானது.
முள்ளிவாய்க்கால் 10 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொதுமக்கள் தலைமையில் நடைபெற முள்ளிவாய்க்கால் பகுதி பொதுமக்களினால் ஏற்பாடுகள் நடைபெறுகின்றதை நாங்கள் அறிகின்றோம். இதற்கு கரைத்துறைப்பற்று பிரதேச சபை முழு ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகப்பகுதி கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் முள்ளிவாய்க்கால் பகுதி பொதுமக்களின் ஏற்பாட்டில் இதுவரை நடைபெற்ற 10 ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான பல்வேறு கலந்துரையாடல் கூட்டங்களில் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் தமிழர் மரபுரிமைப் பேரவை, மாற்றத்துக்கான இளைஞர் அணி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர்கலந்து கொண்டு ஆர்வம் காட்டிவருகின்றனர்.
மேலும் முள்ளிவாய்க்கால் 10 ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பை முன்னாள் போராளிகள் இளைஞர் அமைப்புக்கள் வடக்குக் கிழக்கு மாணவர் ஒன்றியங்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து ஒழுங்கமைப்பதற்கான கலந்துரையாடல்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! பொதுமக்கள் தலைமையில் -
Reviewed by Author
on
March 04, 2019
Rating:

No comments:
Post a Comment