நீண்டகால நண்பரை நலம் விசாரித்தேன்:-விஜயகாந்தை சந்தித்த சரத்குமார் -
சென்னையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்ற அவரது நண்பரும், சமத்துவ மக்கள் கட்சித்தலைவருமான சரத்குமார் நலம் விசாரித்தார்.
அங்கு சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகளும் விஜயகாந்தை சந்தித்துப் பேசினர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் கூறுகையில்,
‘அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பியிருக்கும் தனது நண்பரை சந்தித்து நலம் விசாரித்தேன். மேலும், தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் பேசிக் கொண்டோம்’ என தெரிவித்துள்ளார்.
மக்களவைக் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க-தே.மு.தி.க இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், விஜயகாந்த்-சரத்குமார் இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

நீண்டகால நண்பரை நலம் விசாரித்தேன்:-விஜயகாந்தை சந்தித்த சரத்குமார் -
Reviewed by Author
on
March 04, 2019
Rating:
No comments:
Post a Comment