அண்மைய செய்திகள்

recent
-

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் வெளியானது: எந்த நாடு முதலிடம்?


உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டும் ஜப்பான் நாடு தனது முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவை மையப்படுத்தி, ஹென்லே இன்டக்ஸ் Henley Index என்ற நிறுவனம், ஆண்டுதோறும் எந்த நாட்டின் பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என்ற கணக்கை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது,
விசா இல்லாமல் பிற நாடுகளுக்குச் செல்லும் அனுமதியை வழங்குவதின் அடிப்படையில் இந்த தர வரிசை தயார் செய்யப்படுகிறது.
இந்த தரவரிசை பட்டியலில் ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் முதலிடத்தில் உள்ளன.
மூன்று நாடுகளும் 189 நாடுகளுக்கு விசா இலவச பயணத்தை அங்கீகரித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் ஜேர்மன், மூன்றாவது இடத்தில் பிரான்ஸ், டென்மார்க், பின்லாந்து, இத்தாலி மற்றும் சுவீடன் நாடுகள் உள்ளன.
பிரித்தானியா ஐந்தாவது இடத்தில் உள்ளபோதிலும் ஐரோப்பிய ஒன்றிய பிரச்சனை காரணமாக, தரவரிசை பட்டியலில் அந்நாட்டின் இடம் மாறக்கூடும் என ஹென்லே இன்டக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகள் உள்ளன.
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியல்
  1. Japan, Singapore, South Korea (189 Countries)
  2. Germany (188 Countries)
  3. France, Denmark, Finland Italy, Sweden (187 Countries)
  4. Luxembourg, Spain (186 Countries)
  5. Austria, Netherlands, Norway, Portugal, Switzerland, UK (185 Countries)
  6. USA, Belgium, Canada, Greece, Ireland (184 Countries)
  7. Czech Republic (183 Countries)
  8. Malta (182 Countries)
  9. Australia, Iceland, New Zealand (181 Countries)
  10. Hungary, Latvia, Lithuania, Slovakia, Slovenia (180 Countries)

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் வெளியானது: எந்த நாடு முதலிடம்? Reviewed by Author on March 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.