இலங்கை அரசின் கைகூலியாய வசந்தகுமார் செயல்படுகிறார்: பொன். ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு!
கன்னியாகுமரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நேற்று அதன் தோழமை கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித் மத்திய இணை அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன், பாஜகவின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் கன்னியகுமாரியில், ரூ.40 ஆயிரம் கோடி செலவில் கொண்டுவந்துள்ள பல்வேறு நலத்திட்டங்களை தற்போது புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளேன்.

அதற்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாகவே பொதுமக்களிடம் ஓட்டு கேட்டு வருகிறேன். ஆனால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதனை செயல்படுத்த விடமால் தடுத்து வருகின்றனர்.
பொதுவாக தேர்தலில் திட்டங்களை கொண்டு வருவோம் என்று கூறி தான் வாக்கு கேட்பார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வசந்தகுமார், குமரியில் திட்டங்களை கொண்டு வரமாட்டேன் எனக்கூறி ஓட்டு கேட்கிறார். இலங்கை அரசின் கைக்கூலியாக அவர் செயல்பட்டு வருகிறார் என குற்றம் சுமத்தியதோடு, வருங்கால தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னம் வழங்குவது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.
இதற்கு பதில் கொடுக்கும் விதத்தில் பேசியிருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், தொழிற்சாலைகள் கொண்டு வர கூடாது என்று நான் சொல்வதாக கூறுகிறார்கள். நானும் தொழில் செய்பவன் தான்.
தொழிற்சாலைகள் நிறைந்தால் தான் வேலைவாய்ப்பு பெருகும் என்பதும், பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பதும் எனக்கும் தெரியும். அதே சமயத்தில் மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழும் இடங்களையும், இயற்கையையும் அழித்து தொழிற்சாலை அமைக்க நான் ஒருபோதும் முயற்சி செய்ய மாட்டேன் என பேசியுள்ளார்.
இலங்கை அரசின் கைகூலியாய வசந்தகுமார் செயல்படுகிறார்: பொன். ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு!
Reviewed by Author
on
March 30, 2019
Rating:
No comments:
Post a Comment