உலக நீர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் 'வாடிக்கையாளர் தினம்' இன்று நடாத்த ஏற்பாடு-(படம்)
உலக நீர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட வாடிக்கையாளர்களின் நீர்ப்பட்டியல் மற்றும் நீர் இணைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை 15-03-2019 மன்னாரில் 'வாடிக்கையாளர் தினம்' நடாத்தப்பட தேசிய நீர் வழங்கல் சபையினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் சபையின் பொறுப்பதிகாரி டி.யசோதரன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பொறியியலாளர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை 15-03-2019 காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை குறித்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த சேவையின் போது வாடிக்கையாளரின் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளல் மற்றும் அதற்குரிய தீர்வுகளை மிக விரைவாகப் பெற்றுக்கொடுத்தல்,வாடிக்கையாளரின் நீர்ப்பட்டியல் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் , சபையினால் வாடிக்கையாளரின் வசதி கருதி அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவைகள் சம்பந்தமாக அறிவூட்டுதல் உள்ளிட்ட சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
-எனவே மன்னார் மாவட்ட பொறியியலாளர் அலுவலகத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சமூகமளித்து தங்களது தேவைகளுக்குரிய தீர்வினைப் பெற்றுச்செல்லுமாறு வடிக்கையாளர்களிடம் மன்னார் தேசிய நீர் வழங்கல் சபையின் பொறுப்பதிகாரி டி.யசோதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக நீர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் 'வாடிக்கையாளர் தினம்' இன்று நடாத்த ஏற்பாடு-(படம்)
Reviewed by Author
on
March 15, 2019
Rating:
Reviewed by Author
on
March 15, 2019
Rating:


No comments:
Post a Comment