இந்திய டி20 வரலாற்றில் புதிய சாதனை படைத்த சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா!
சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல் டி20 போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா 32 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்தார். இந்நிலையில் சுரேஷ் ரெய்னா இந்திய டி20 அரங்கில் புதிய சாதனைகளை படைத்தார்.
- இந்தியாவில் நடந்த டி20 போட்டிகளில் மொத்தம் 6 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய முதல் இந்திய வீரர் எனும் பெருமையை ரெய்னா பெற்றார்.
- தான் விளையாடியுள்ள 179 ஐ.பி.எல் போட்டிகளில், சென்னை அணிக்காக மட்டும் ரெய்னா 150 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன்மூலம் சென்னை அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
- சமீபத்தில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், ஐ.பி.எல்-யில் 5 ஆயிரம் ஓட்டங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரெய்னா படைத்தார்.

இந்திய டி20 வரலாற்றில் புதிய சாதனை படைத்த சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா!
Reviewed by Author
on
April 02, 2019
Rating:
No comments:
Post a Comment