ஒரே நாளில் 37 பயங்கரவாதிகளின் தலை துண்டிக்கப்பட்டது எதற்காக? -
சவூதி அரேபியாவில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று 37 பேர் இரக்கமில்லாமல் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளானார்கள்.
இந்த சம்பவமானது உலக நாடுகள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் துவங்கி பல தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்துள்ள அந்நாட்டு உள்துறை அமைச்சகம், பயங்கரவாதிகள் 5 பேர் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாலே மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ஆனால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் சார்பில் வாதாடியிருந்த வழக்கறிஞர், அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளனர் என குற்றம் சுமத்தியிருந்தார்.
ஷரியா சட்டத்தின்படி வளைகுடா நாடுகளில் ஓரினசேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் 37 பயங்கரவாதிகளின் தலை துண்டிக்கப்பட்டது எதற்காக? -
Reviewed by Author
on
April 28, 2019
Rating:

No comments:
Post a Comment