மன்னாரில் இயல்பு நிலை மூன்றாவது நாளாகவும் ஸ்தம்பிதம்-வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டு.
நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து மன்னாரின் இயல்பு நிலை மூன்றாவது நாளாக இன்று புதன் கிழமை ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு இன்றைய தினம் மன்னாரில் ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இன்றைய தினம் மன்னாரில் ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களுக்கு முன் கறுப்புக் கொடி ஏற்றி பூரண ஹர்த்தால் அணுஸ்ரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தமது வர்த்தக நிலையங்களுக்கு முன் கருப்புக்கொடிகளை பறக்கவிட்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் முப்படையினரின் பாதுபாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் போக்கு வரத்துக்கள் வழமைபோல் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இன்றைய தினம் மன்னாரில் ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களுக்கு முன் கறுப்புக் கொடி ஏற்றி பூரண ஹர்த்தால் அணுஸ்ரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தமது வர்த்தக நிலையங்களுக்கு முன் கருப்புக்கொடிகளை பறக்கவிட்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் முப்படையினரின் பாதுபாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் போக்கு வரத்துக்கள் வழமைபோல் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இயல்பு நிலை மூன்றாவது நாளாகவும் ஸ்தம்பிதம்-வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டு.
Reviewed by Author
on
April 24, 2019
Rating:
Reviewed by Author
on
April 24, 2019
Rating:

No comments:
Post a Comment