இந்தியா பதிலடி: பாகிஸ்தானின் 7 பாதுகாப்பு நிலைகள் அழிப்பு -
இந்நிலையில் இதற்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள பாகிஸ்தானின் 7 பாதுகாப்பு நிலைகளை அழித்துள்ளனர்.
மேலும், இந்த தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்துவிட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
புல்வாமா பகுதியில் 14-2-2019 அன்று பயங்கரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா பதிலடி: பாகிஸ்தானின் 7 பாதுகாப்பு நிலைகள் அழிப்பு -
Reviewed by Author
on
April 03, 2019
Rating:
No comments:
Post a Comment