அண்மைய செய்திகள்

recent
-

எமக்கான நீதிக்காக அமெரிக்கா தலையிட வேண்டும்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை -


வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது பிள்ளைகளுக்கான நீதியைப் பெற அமெரிக்கா தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது?, அவர்கள் எங்கே? என பல கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் 777ஆவது நாளாகவும் தொடர்ந்து இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

வவுனியா, ஏ9 வீதி, வீதி அதிகார சபை முன்பாகவுள்ள அவர்களது போராட்ட கொட்டகை முன்பாக இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் இராணுவத்தினரிடம் ஒப்படைத்த தமது பிள்ளைகளை தேடி 777 நாட்களாக போராடி வருகின்றோம். அரசாங்கமும் சரி, எமது தமிழ் அரசியல்வாதிகளும் சரி எமக்கு தீர்வைப் பெற்று தரவில்லை.
நாம் இந்த அரசாங்கத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் நம்பிக்கையை இழந்துள்ளோம். எமக்கான தீர்வை பெற்றுத் தர அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் தலையிட வேண்டும்.


நாம் அமெரிக்காவை தலையிட கோரி ஒன்றரை இலட்சம் கையெழுத்துக்களைப் பெற்றுள்ளோம். இன்னும் ஒன்றரை இலட்சம் கையெழுத்து பெற்று மூன்று இலட்சம் கையெழுத்துக்களுடன் அமெரிக்காவுக்கு அனுப்பவுள்ளோம் என இதன்போது அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் புகைப்படங்கள், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியனின் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எமக்கான நீதிக்காக அமெரிக்கா தலையிட வேண்டும்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை - Reviewed by Author on April 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.