கிறிஸ்துமஸ் தீவு முகாம் மூடப்படுவதை உறுதி செய்யும் அவுஸ்திரேலியா!
வரும் ஜூலை முதலாம் திகதிக்குள் கிறிஸ்துமஸ் தீவில் செயல்பட்டு வரும் அகதிகள் தடுப்பு முகாமை மூடுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இம்முடிவு அவுஸ்திரேலியாவின் நிதிநிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது ஆட்சியில் உள்ள லிபரல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிறிஸ்துமஸ் தீவு முகாம் மூடப்படும் என்ற முடிவு கிறிஸ்துமஸ் தீவு வாசிகளை வருத்தமடைய செய்துள்ளதாக அத்தீவின் நிர்வாகத் தலைவர் கோர்டன் தாம்ஸன் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, கடந்த பெப்ரவரி மாதம் ஆளும் லிபரல் அரசின் எதிர்ப்பை மீறியும் அகதிகள் தொடர்பான மருத்துவ வெளியேற்ற மசோதா எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
மனுஸ் மற்றும் நவுருத்தீவில் செயல்பட்டு வரும் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள பல்வேறு நாடுகளின் அகதிகள் உடல் மற்றும் மனநலன் ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இம்மசோதா சட்டமாக்கப்பட்டதன் மூலம், இந்த அகதிகளுக்கு மேலதிக மருத்துவ உதவிகளை வழங்கவதற்கு அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வர இச்சட்டம் வழிவகை செய்கிறது.
அதை எதிர்கொள்ளும் விதமாக, 1.4 பில்லியன் டாலர்கள் செலவில் மீண்டும் கிறிஸ்துமஸ் தீவு முகாம் திறக்கப்படும் என அறிவித்திருந்தார் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன்.
அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு பதிலாக கிறிஸ்துமஸ் தீவு முகாமிற்கு கொண்டு செல்ல லிபரல் அரசு திட்டுமிடுவதாக கூறப்பட்டது.
மீண்டும் தேர்தலில் வெற்றிப்பெற்றால் மருத்துவ வெளியேற்ற மசோதாவை ரத்து செய்ய லிபரல் அரசு திட்டமிட்டுள்ளதால், அந்த ரத்து நடவடிக்கையின் மூலம் மீண்டும் கிறிஸ்துமஸ் தீவு முகாமை மூடிவிட முடியும் என அவுஸ்திரேலிய நிதி அமைச்சர் மேத்யிஸ் கோர்மன் தெரிவித்துள்ளார்.
“கிறிஸ்துமஸ் தீவு முகாம் திறக்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து கடந்த மாதத்தில் அரசு முதலீடுகளின் மூலம் சில பயன்களை கண்டோம்,” எனக் கூறியுள்ள அத்தீவின் நிர்வாகத் தலைவர் தாம்ஸன் அப்படியான பயன்களை நிதிநிலை அறிக்கை சாத்தியமற்றதாக்கி உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.
“சுற்றுலா தீவு என்பதற்கு பதிலாக சிறைத் தீவு என கிறிஸ்துமஸ் தீவு அறியப்படுவது தீவின் மீது எதிர்மறையான பார்வையை கொண்டு வந்துவிடும். அதை தான் அந்த தீவில் உள்ள பலர் எதிர்ப்பார்க்கின்றனர்.
ஆனால் நீண்ட காலப் பார்வையில் அது அங்குள்ள மக்களுக்கு சமூக ரீதியாக, தார்மீக ரீதியாக, பொருளாதார ரீதியாக சரியானதாக இருக்காது,” என நிதி அமைச்சர் கோர்மன் தெரிவித்திருக்கிறார்.
அதே சமயம், மருத்துவ உதவி தேவைப்படும் அகதிகள் யாரேனும் கிறிஸ்துமஸ் தீவு முகாமிற்கு இடம் மாற்றப்பட்டு உள்ளனரா என்பதற்கு பதிலளிக்க அவுஸ்திரேலிய உள்துறை மறுத்துவிட்டது.
கிறிஸ்துமஸ் தீவு முகாம் மூடப்படுவதை உறுதி செய்யும் அவுஸ்திரேலியா!
Reviewed by Author
on
April 07, 2019
Rating:
Reviewed by Author
on
April 07, 2019
Rating:


No comments:
Post a Comment